
இன்று காலை எட்டு மணியளவில் விமானப்படை முகாமில் முன்னெடுக்கப்பட்ட பரசூட் பயிற்சியின் போது இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் அம்பாறை - உகண பகுதியில் இடம்பெற்றுள்ளது. 8 ஆயிரம் அடி உயரத்தில் இரு பரசூட் வீரர்களும் சிக்கிக் கொண்டதால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் 34 வயதுடைய விமானப்படை அதிகாரியொருவரே உயிரிழந்துள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக இலங்கை விமானப்படை மேலும் தெரிவித்துள்ளது.
Post a Comment