அமெரிக்க வரலாற்றிலேயே அதிக வயதுடைய ஜனாதிபதி ஜோ பைடன்தான்
அவருக்கு இப்போது 78 வயதாகிறது. அவர் விமானப்படிக்கட்டுகளில் ஏறும் போது தடுக்கி விழுந்துள்ளார்.

அமெரிக்காவின் அட்லாண்டாவில் மசாஜ் சென்டர் ஒன்றில் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக, அங்குள்ள ஆசிய-அமெரிக்க சமூகத்தினரிடம் பேச ஜோ பைடன் வாஷிங்டனில் இருந்து நேற்று புறப்பட்டார்.

விமானப்படிக்கட்டுகளில் ஏறும் போது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் 2 முறை தடுக்கிய நிலையில் மூன்றாவது முறை கீழே விழுந்தார். அவர்  தடுக்கி விழும் காட்சிகள் சமூக இணைய தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அவர் மூன்று முறை தடுமாறியும், மூன்றாவது முறை விழுந்தும் யாரும் அவருக்கு உதவவில்லையாம். இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள வெள்ளை மாளிகை வட்டாரமோ, பைடன் காற்று பலமாக வீசியதால் தடுமாறியதாக தெரிவித்துள்ளது. 



Post a Comment

Previous Post Next Post