
லுணுகலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று, பதுளை - பசறை 13ஆம் கட்டைப் பகுதியில் சுமார் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து இன்று காலை விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 14 எனவும் 46 பேர் காயமடைந்ததாகவும். காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படுவதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Post a Comment