வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த் தொற்று பரவுல் காரணமாக வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டுமென அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் அனுமதியை பெற வேண்டிய அவசியமில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Post a Comment