இலங்கையில் புத்தாண்டு காலப்பகுதியில் நடத்தப்படும் விழாக்கள் மற்றும் நிகழ்வுகளுக்கு சுகாதார தரப்பினர் மற்றும் காவல்துறையின் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.


அவ்வாறு உரிய தரப்பினரிடம் அனுமதி பெறாமல் பொது நிகழ்வுகள் நடத்தப்பட்டால் அது தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறும் செயலாக கருப்படும் என தெரிவித்துள்ளார்.

எனவே, தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் அதனுடன் தொடர்புடையோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டார்.

Post a Comment

Previous Post Next Post