இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்கக்கூடிய நிலைமை இல்லை என்று அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

மனித உரிமைகள் பேரவையில் நேற்று (23) நிறைவேற்றப்பட்ட பிரேரணை ஊடாக இந்த ஆபத்து இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.

இந்த மாநாட்டில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகமாக செயற்படும் ருவன் சத்குமாரம் கலந்துகொண்டார்.

இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் மூலம் நிறைவேற்றப்பட்ட பிரேரணை ஊடாக இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கப்படுமா? என கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில், இதனால் பொருளாதார பாதிப்பு ஏற்படாது. மனித உரிமைகள் பேரவையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையினால் தனிப்பட்ட ரீதியில் பேரவையினால் சில நாடுகளுக்கு இதனை வலியுறுத்த முடியும்.

ஆனால் இவ்வாறான தடை விதிக்கப்பட வேண்டுமாயின், ஜக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையிலேயே இதுதொடர்பில் தீர்மானங்கள் மேற்கொள்ள வேண்டும். பாதுகாப்பு சபையில் வீடோ அதிகாரத்தை கொண்ட பால நாடுகள் உண்டு.

அவை எமக்கு ஆதரவு வழங்கும் என்று அமைச்சர் கூறினார்.

இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் இன்னும் உரிய வகையில் நிரூபிக்கப்படவில்லை.

Post a Comment

Previous Post Next Post